சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-11 18:38 GMT
கரூர், 
தர்மபுரி, சிவகங்கை மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை, தொழிற்சங்கம் தொடங்கிய காரணத்திற்காக வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்த நிறுவனங்களை கண்டித்தும், பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தியும் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் முருகேசன், ராஜாமுகமது, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்