ரூ 2½ கோடிக்கு பருத்தி ஏலம்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.58 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. தமிழகத்திலேயே பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-03-11 18:15 GMT
மூலனூர்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.58 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. தமிழகத்திலேயே பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பருத்தி ஏலம்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 754  பேர் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
 பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டனர். 
ரூ.2½ கோடிக்கு விற்பனை
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 802-க்கும் குறைந்தபட்ச விலை ரூ.950-க்கும் சராசரி விலை ரூ.10 ஆயிரத்து 450-க்கும் விற்பனையானது. 
பருத்தியின் மொத்த அளவு 754 மூட்டைகள் 2491.48 குவிண்டாலின் மதிப்பு ரூ.2 கோடியே 57 லட்சத்து 43 ஆயிரத்து 560.21 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். 
ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார். தமிழகத்திலேயே பருத்திக்கு மூலனூர் விற்பனைக்கூடத்தில் அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்