கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

Update: 2022-03-11 18:09 GMT
கல்லல்

கல்லல் அருகே செம்பனூரில் உள்ள காசி வல்லநாட்டு கருப்பர் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 37 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருவாதவூர் புதுப்பட்டி சின்னச்சாமி மற்றும் ஊடுசேரி சந்தானி வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 3-வது பரிசை கம்பம் பாலு வண்டியும், 4-வது பரிசை மலம்பட்டி காயத்திரி ஸ்டோர் வண்டியும் பெற்றது. 
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. 
முதல் பிரிவில் முதல் பரிசை நகரம்பட்டி கண்ணதாசன் வண்டியும், 2-வது பரிசை செம்பனூர் கங்கானிசரவணன் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 4-வது பரிசை பெருமாள்பட்டி பிரான்மலைசுவாமி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் வண்டியும், 2-வது பரிசை தஞ்சாவூர் திருமுருகன் வண்டியும், 3-வது பரிசை வீழநேரி ராமநாதன் வண்டியும், 4-வது பரிசை கம்பம் முத்துக்கருப்பர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் செய்திகள்