மணலூர்பேட்டை நூலகத்தில் புத்தக கண்காட்சி

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலுர்பேட்டை கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி மற்றும் மகளிர் தின விழா நடந்தது.

Update: 2022-03-11 17:59 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலுர்பேட்டை கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி மற்றும் மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு வாசகர் வட்ட குழுத்தலைவர் கு.அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்மு ரவி, அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் அன்பழகன் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்று நட்டு வைத்தார். கண்காட்சியில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான நூல்கள், பொது அறிவு, புதினம், ஆன்மிகம், சிறுகதை, சிறுவர் நூல்கள், அறிவியல், வரலாறு, மருத்துவம், சட்டம் போன்ற 3000 தலைப்பிலான தமிழ், ஆங்கில நூல்கள் மற்றும் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக நிதியின் மூலம் பெறப்பட்டு வரும் பருவ இதழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

விழாவில் திருக்கோவிலூர் வாசகர் வட்ட குழுத்தலைவர் சிங்கார உதியன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்