கலவை அங்காளம்மன் கோவிலில் ராவணாசூர வாகனத்தில் சிவன்-அம்பாள் வீதிஉலா

கலவை அங்காளம்மன் கோவிலில் ராவணாசூர வாகனத்தில் சிவன்-அம்பாள் வீதிஉலா நடந்தது.

Update: 2022-03-11 17:52 GMT
கலவை

கலவையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அங்காளம்மன் காத்து கருப்பு, பில்லி சூனியம் போன்ற தீய சக்தியை விரட்டும் பிரசித்திப் பெற்றவர் ஆவார். கோவிலில் கடந்த அமாவாசையன்று மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
 
10-வது நாளான நேற்று ராவணா சூர வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர்களான சிவன், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் சிவன், அம்பாளை வழிபட்டனர்.

பல பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். 
திருவிழாவை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகி சவுந்தர்ராஜன், சந்தானம் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

மேலும் செய்திகள்