திண்டிவனத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
திண்டிவனத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
திண்டிவனம்
திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் அஜய்(வயது 24). கடந்த 2018-ம் ஆண்டு நடந்த அடி-தடி வழக்கில் இவரை திண்டிவனம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அங்கிருந்து தப்பி சென்ற அஜய்யை போலீசார் மீண்டும் கைது செய்து தப்பி சென்றதற்காக தனியாக வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேற்படி இரு வழக்குகளும் திண்டிவனம் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அஜய், கடந்த ஆண்டில் இருந்து கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததை அடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகில் நின்றிருந்த அஜய்யை திண்டிவனம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.