சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-03-11 17:29 GMT
காட்பாடி

கல்வித்துறை சார்பில் காட்பாடி வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான சாலை விதிகளை பாதுகாப்போம் என்னும் தலைப்பிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

போட்டிகளில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா காட்பாடியில் நடந்தது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.

விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் குப்புராமன், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்