கள் இறக்க தடையை நீக்கக்கோரி பனை மரத்தில் ஏறி நின்று தொழிலாளர்கள் போராட்டம்
கள் இறக்க தடையை நீக்கக்கோரி பனை மரத்தில் ஏறி நின்று தொழிலாளர்கள் போராட்டம்
விக்கிரவாண்டி
தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி தலைமையில் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்பு அறப்போராட்டம் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 50-வது நாளாக விக்கிரவாண்டி அடுத்த பூரி குடிசை கிராமத்தில் கள் இயக்கத்தோடு இணைந்து தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தீபன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பனை ஏறும் தொழிலாளர்கள் உரிய உபகரணங்களுடன் பனை மரத்தில் ஏறி நின்றும், தரையில் நின்றும் 85 ஆண்டு கால கள் இறக்க தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன் உள்பட 150 பனை ஏறும் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.