பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;
பாலக்கோடு:
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரவி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகளை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கிராம மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.