விளைநிலங்களில் மேய்ந்த மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்த விவசாயிகள்

விளைநிலங்களில் மேய்ந்த மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்த விவசாயிகள்;

Update: 2022-03-11 16:57 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நன்னாடு, பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள், தோட்டப்பயிரான வாழையையும், ஊடு பயிர்களாக உளுந்து, காராமணி ஆகியவற்றையும் பயிர் செய்துள்ளனர். ஏற்கனவே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தினால் இந்த பயிர்கள் நாசமடைந்து வருகின்றன. இந்த சூழலில் மாடுகளை வளர்ப்பவர்கள், இரவு நேரங்களில் தங்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகிறார்கள். இதனால் பயிர்கள் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் மாடுகளை நன்னாடு, பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பிடித்து அங்குள்ள ஒரு கொட்டகையில் கட்டி வைத்தனர். ஆனால் மாடுகளின் உரிமையாளர்கள் சொந்தம் கொண்டாட வரவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகம், இதில் கவனம் செலுத்தி மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்