ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய மந்திரி பகவத் காரத் பதில்

ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுமா? என்பதற்கு மத்திய இணை மந்திரி பகவத் காரத் பதிலளித்தார்.

Update: 2022-03-11 16:57 GMT
கோப்பு படம்
மும்பை,
ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுமா? என்பதற்கு மத்திய இணை மந்திரி பகவத் காரத் பதிலளித்தார். 
பெட்ரோல், டீசல் விலை
மராட்டிய வார்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சங்கத்தின் (எம்.சி.சி.ஐ.ஏ.) கூட்டம் புனேயில் நடைபெற்றது. இதில் மத்திரி நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் கலந்துகொண்டார். 
பின்னர் அவரிடம் ரஷியா- உக்ரைன் போர் சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படும் தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
மத்திய அரசு கண்காணிக்கிறது
ரஷியா- உக்ரைன் போரை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இருப்பினும் சூழ்நிலையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக எதிர்காலத்தில் நாட்டு மக்கள் எந்த கஷ்டத்தையும் சந்திக்காமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கருத்து தெரிவிப்பது கடினம். ஆனால் மந்திரி சபை இதுகுறித்து முடிவு செய்யும். மூத்த மந்திரிகள் அடங்கிய குழு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்