தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-11 16:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று வள்ளிநாயகபுரம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேககப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த சேர்மராஜ் மகன் சக்தி என்ற சக்திவேல் (வயது 23), பிரையன்ட் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிவா என்ற சிவபாலன் (23) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த பொதுமக்களை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிரு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்