வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியினை அதிகாரி ஆய்வு

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியினை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-03-11 16:12 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் பைப்லைன் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. அதனை ஊராட்சி முகமை சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணக்குமார் ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சியின் பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

 ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சி) விஜயகுமாரி, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னி கப்பல் துறை, ஊராட்சி செயலாளர் உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்