காளான் வளர்ப்பு கொட்டகை அமைக்க அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
தலைஞாயிறில் காளான் வளர்ப்பு கொட்டகை அமைக்க அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
மகளிர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் மகளிர்களுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 22 பேருக்கு காளான் வளர்ப்பு கொட்டகை அமைக்க அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். ஆத்மா திட்ட தலைவர் மகா குமார் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ், ரவீந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் வெங்கடாசலம், ரவிச்சந்திரன், ரத்தினகுமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.