வேட்டவலம்
வேட்டவலத்தை அடுத்த பன்னியூர், சாணிப்பூண்டி ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.
அந்த ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது.
கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சக்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி, வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அல்லி, வட்ட சார் ஆய்வாளர் சென்னையன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகதீசன், கண்ணாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமிநாதன், மலர் ஏழுமலை, கிராம உதவியாளர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பன்னியூர் கிராமத்தில் உள்ள ஏரியை 3 பேர் ஆக்கிரமித்துள்ளனர். அதில் ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்ததை அகற்றினர்.