திருப்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் திடீர் தர்ணா
திருப்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரை அடுத்த லக்கிநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஜல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு அன்பு (வயது 22) என்ற மகனும், பிரித்தி என்ற மகளும் உள்ளனர்.
அன்பு 3-ந்தேதி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்குச் சென்றார். அங்கு, வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது வெளியில் சென்றவர், பின்னர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மேஸ்திரி ஜோசப், அன்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். காணாமல்போன அன்புவை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை காணவில்லை.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் தந்தை ராஜா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புவை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் அன்புவின் தாயார் ஜெயக்கொடி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், காணாமல்போன எனது மகனை போலீசார் கண்டுபிடித்துத் தர வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார். அங்கிருந்த போலீசார், அவரை சமசரம் செய்து அனுப்பினர்.