ஊட்டியில் இரவு நேரத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணி

ஊட்டியில் இரவு நேரத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-03-11 15:54 GMT
ஊட்டி

ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. இங்கு நகராட்சி மார்க்கெட், கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காணப்படும் குப்பைகள் தினமும் அகற்றப்பட்டு வருகிறது. 

இருப்பினும் நீண்ட நேரம் ஆவதால், குப்பைகள் சேகரமாகும் அன்றைய தினம் இரவிலேயே அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். 

அதன்படி ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் கமர்சியல் சாலை, லோயர் பஜார், நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சேகரமாகும் குப்பைகளை இரவில் வாகனங்களில் சென்று சேகரித்து வருகின்றனர்.

 ஊட்டியில் நிலவும் குளிரையும் பொருட்படுத்தாமல் பணியாளர்கள் இரவில் குப்பைகளை தரம்பிரித்து வாங்குகின்றனர். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்காமல் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்