சாலையை கடக்க முயன்ற முதியவர் மினிவேன் மோதி சாவு

செங்கம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மினிவேன் மோதி சாவு

Update: 2022-03-11 15:52 GMT
செங்கம்

செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி குப்பை கிராம பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 65). 

இவர் நேற்று  மாலை அம்மாபாளையம் அருகே செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். 

அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு மினி வேன் திடீரென அவர் மீது மோதியது. 

அதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்