வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் புதிய கமாண்டன்ட் பொறுப்பேற்பு

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் புதிய கமாண்டன்ட் பொறுப்பேற்றார்.

Update: 2022-03-11 15:14 GMT
ஊட்டி, மார்ச்.12-
 
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா மற்றும் நமது நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பயிற்சி கல்லூரியின் புதிய கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்று உள்ளார். புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி கடந்த 1986-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ விமான பாதுகாப்பு படையில் சேர்ந்தார். 

தமிழகத்தை சேர்ந்த அவருக்கு தமிழகத்தின் வரலாறு, பழக்கவழக்கங்கள், மரபுகளை நன்கு அறிந்தவர். இந்திய ராணுவ துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். 

அவர் ஐக்கிய நாடுகளின் தூதரகத்திலும், வியட்நாம், கம்போடியாவில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணிபுரிந்து உள்ளார். கடந்த 1948-ம் ஆண்டு குவெட்டா (பாகிஸ்தானில்) இருந்து இடம்பெயர்ந்த வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி 74 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. 

இந்திய ஆயுதப்படைகளின் முதன்மையான முப்படை சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்