மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 36). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் பின்புறம் நிறுத்தி இருந்தாராம். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் (43) என்பவர், ஜோதியின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டாராம். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.