ஏரியில் தவறி விழுந்து பெண் சாவு

ஏரியில் தவறி விழுந்து பெண் பலியானார்.

Update: 2022-03-11 14:40 GMT
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள கும்ளாபுரத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா (வயது 35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 9-ந் தேதி இவர் கும்ளாபுரம் அரிஜனா ஏரி பக்கமாக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியம்மா ஏரிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்