காளப்பட்டியில் உள்ள மோட்டார் பம்ப் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென்று சோதனை நடத்தினார்கள்

காளப்பட்டியில் உள்ள மோட்டார் பம்ப் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென்று சோதனை நடத்தினார்கள்;

Update: 2022-03-11 14:22 GMT
கோவை

கோவை பாலசுந்தரம் ரோட்டில் இந்திய தர நிர்ணய (பி.ஐ.எஸ்) அலுவலகம் உள்ளது. 

அங்கு பணியாற்றும் அதிகாரிகள் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பொருட்கள் தரமாக தயாரிக்கப்படுகின்றனவா?, விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுகிறதா? என சோதனை நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில், இந்திய தர நிர்ணய தலைமை அதிகாரி மீனாட்சி கணேசன் தலைமையில் அதிகாரிகள் காளப்பட்டியில் உள்ள ஸ்டார்க் மோட்டார் பம்ப் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென்று சோதனை நடத்தினார்கள். 

இதில் அங்கு தர நிர்ணய விதிகளை பின்பற்றாமல்  மோட்டார்கள் உற்பத்தி செய்வது தெரியவந்தது. உடனே அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் அந்த நிறுவன உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்று தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்