மும்பை பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது

மும்பை பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-11 14:14 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மாலை மர்ம நபர் ஒருவர்  போன் மூலம் தொடர்கொண்டு, மும்பை பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நிமிடங்களில் அது வெடித்து பல்கலைக்கழகம் தரைமட்டமாகும் என்றும் மிரட்டல் விடுத்தார். 
இதையடுத்து உஷாரான மும்பை போலீசின் வெடிகுண்டு பிரிவினர் உடனடியாக மும்பை பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அங்குளம், அங்குளமாக சோதனை நடத்தியும் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளி என தெரியவந்தது. 
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். 
இதில் தொடர் குற்றவாளியான சூரஜ் ஜாதவ் (வயது30) என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்