அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
கோவை
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு வேலை
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் முருகன் (வயது 25). என்ஜினீயர்.
இவர்கள் குடுபத்துடன் கோவையை அடுத்த சூலூர் எஸ்.எல்.எஸ். நகரில் வசித்து வருகின்றனர்.
முருகனை, சூலூரை சேர்ந்த டிரைவர் பிரதீப் என்பவர் அணுகினார்.
அவர், சிங்காநல்லூர் இஎஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் தன்யா என்பவர் தனக்கு அறிமுகமானவர்.
அவரிடம் பணம் கொடுத்தால் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளார்.
ரூ.15 லட்சம் மோசடி
அதை நம்பிய முருகன் தனக்கும் பட்டதாரியான தனது தம்பி வெள்ளை பாண்டிக்கும் அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்று கேட்டு 3 தவணைகளில் தன்யா, பிரதீப் ஆகியோரிடம் ரூ.15 லட்சம் கொடுத்தார்.
ஆனால் பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள் பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்க வில்லை.
இதனால் பணத்தை திரும்ப கொடுக்குமாறு முருகன் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை யும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ய முயன்றனர்.
2 பேர் மீது வழக்கு
இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீ சார் விசாரணை நடத்தினர்.
இதில், தன்யா இ.எஸ்.ஐ. மருத்துவமனை யில் டாக்டராக வேலை பார்க்கவில்லை என்பதும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தன்யா சிங்காநல்லூரில் 2 குழந்தைகளுடன் வசிப்பதும் தெரிய வந்தது. தன்யாவிடம்,
பிரதீப் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.இதனால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி
ரூ.15 லட்சம் மோசடி செய்த தன்யா, டிரைவர் பிரதீப் ஆகிய 2 பேர் மீது மோசடி உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.