திங்கட்கிழமை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திங்கட்கிழமை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
கொரோனா தொற்று மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும் மக்கள் குறைத்தீர்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை முதல் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடத்தப்படும். இந்த மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், சப்- கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர், துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள்.
பொதுமக்கள் மனுவில் செல்போன் எண் மற்றும் ஆதர் எண்களை பதிவு செய்து மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.