மின்னழுத்த குறைபாட்டை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
மின்னழுத்த குறைபாட்டை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
அரக்கோணம்
அரக்கோணத்ைத அடுத்த தணிகைபோளூர் மேட்டுநகர் பகுதி மக்கள், எங்கள் பகுதியில் குைறந்த மின்னழுத்தத்தில் மின்சார வினியோகம் செய்யப்படுவதாக, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் புகார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் மின்னழுத்த குறைப்பாட்டை போக்க 63 கிேலா வாட்ஸ் திறன் கொண்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, அதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை சாலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேகர், கும்பினிபேட்டை உதவி பொறியாளர் எழில்பாபு, தணிகை போளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசேன் ஆகியோர் பங்கேற்று புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவா கிருஷ்ணன், வார்டு உறுப்பினர் பரந்தாமன், ஊராட்சி செயலாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.