பூங்கா நிலத்தில் கொட்டப்பட்ட மண் அகற்றம்

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் பூங்கா நிலத்தில் கொட்டப்பட்ட மண் அகற்றம்

Update: 2022-03-11 13:10 GMT
வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பூங்கா நிலம் உள்ளது. அதை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

அதையறிந்த அப்பகுதி மக்கள் இன்று காலை பூங்கா நிலத்தில் கொட்டப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

 ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பூங்கா நிலத்தை மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்