ரெயில் மோதி தீயணைப்பு படைவீரர் பலி

கொடைரோட்டில் ரெயில் மோதி தீயணைப்பு படை வீரர் பலியானார்;

Update: 2022-03-11 12:53 GMT
கொடைரோடு:
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்த பாண்டியன்நகரை சேர்ந்தவர் காந்தி (வயது 84). ஓய்வுபெற்ற தீயணைப்பு படைவீரர். இவர் கடந்த ஒரு வாரமாக தேவதானப்பட்டியில் உள்ள தனது மகள் இந்திராகாந்தி வீட்டில் தங்கி இருந்தார். 

இந்தநிலையில் தனது மகளிடம், தான் காசி செல்வதற்கு டிக்கெட் எடுக்க கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு சென்ற அவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. 

இதில் காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜூமாயூன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்