பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று திருவாரூரில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி கூறினார்.

Update: 2022-03-11 12:38 GMT
திருவாரூர்;
போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று திருவாரூரில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி கூறினார். 
மகளிர் தினவிழா
திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாதர் சங்க மாநில துணைத்தலைவருமான பாலபாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. போக்சோ சட்டமானது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சிறந்த சட்டமாக இருந்தபோதும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. 
வேதனை
போலீஸ்துறையும், நீதிமன்றங்களும் போதிய ஆதாரம் இல்லை என்ற பெயரில் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடுவது வேதனையளிப்பதாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நாம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாநில செயலாளர் குரு சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணைச் செயலாளர் புவனேஸ்வரி,  துணைத்தலைவர்கள் தமிழரசன், பெத்தபெருமாள், பாலசுப்ரமணியன்,  பொருளாளர் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற டாக்டர் வஜிஹா நாச்சியார், ஓய்வு பெற்ற சமூக நலத்துறை அலுவலர் கஸ்தூரி, திருவாரூர் ஒன்றிய தலைவர் சீதாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்