பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
கம்பத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
கம்பம்:
கம்பம் ஓடைக்கரை தெருவைச் சேர்ந்தவர் பஞ்சு (வயது 35). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியில் குடியிருக்கும் தொழிலாளியான வடமல்ராஜும் (60) உறவினர்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் வடமல்ராஜ் பஞ்சுவை வழிமறித்து தகராறு செய்தார்.
பின்னர் அவர் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பஞ்சுவின் 2 கைகளில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்து. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து வடமல்ராஜை கைது செய்தார்.