நீடாமங்கலம்;
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி பழையநீடாமங்கலம் கீழ ஆதிதிராவிடர் தெரு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. சம்பவத்தன்று இந்த டிரான்ஸ்பார்மரில் ஒரு ஆண் மயில் மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்துகிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் மன்னார்குடி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மயிலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.