கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் 250 கிலோ கஞ்சா கடத்தல்

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டோரை கைது செய்த கவரைப்பேட்டை போலீசார், அவர்களை சிறப்பு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-03-11 12:07 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு சொகுசு காரை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஆந்திராவில் இருந்து 127 பாக்கெட்டுகளில் மொத்தம் 250 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்தது. 

காரில் பயணம் செய்த 17 வயது சிறுவன் மற்றும் கார் டிரைவரான மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த கரப்பம்பட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(வயது 22), அய்யர்(55), ஜெயக்குமார்(24) ஆகியோரை கைது செய்த கவரைப்பேட்டை போலீசார், அவர்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு சிறப்பு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், மாவட்ட தனிப்பிரிவு போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்