தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு

தேனி அரசு மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2022-03-11 11:41 GMT
ஆண்டிப்பட்டி:
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் நேற்று விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 இதற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமை தாங்கி கல்லூரியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். 
விழாவில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் டாக்டர்களின் அடையாளமான வெள்ளைநிற கோர்ட்டும் வழங்கப்பட்டது. துறை பேராசிரியர்கள் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள், கட்டுப்பாடுகள் குறித்து பேசினர். தேனி அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளாக ‘ராகிங்’ இல்லை என்றும், இது தொடரும் வகையில் ‘ராகிங்’  தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார். 


விழாவையொட்டி மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்