கூடுவாஞ்சேரியில் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகம் திறப்பு

கூடுவாஞ்சேரியில் மின் கட்டணம் செலுத்தும் கட்டிடத்தை செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;

Update:2022-03-11 17:03 IST
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி துணை மின் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின் கட்டணம் செலுத்தும் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் எம்.நாகராஜன், உதவி பொறியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு புதிய மின் கட்டண வசூல் மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நகராட்சி துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி உறுப்பினர்கள், மற்றும் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்