10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

10-ம் வகுப்பு மாணவி அடிக்கடி செல்போனில் பேசியதை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-11 11:09 GMT
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் பேத்தி பவானி(வயது15). இவர் காஞ்சீபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகரில் தனது சித்தி வீட்டில் தங்கி, பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பவானி அடிக்கடி செல்போனில் பேசிகொண்டு இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் பவானியிடம் படிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிகொண்டே இருக்கிறாயே? என்று கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த பவானி, வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்