பெண்ணிடம் நகை பறிப்பு

பொத்தேரி அருகே பெண்ணிடம் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Update: 2022-03-11 10:55 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரசு (வயது 58), இவர் கடந்த 7-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் ஆஸ்பத்திரி கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென அருகில் வந்த ஒரு வாலிபர் சரசு அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் சரசு மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்‌. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்