ஆவடி மாநகராட்சியில் பணியாற்றிய முன்னாள் பெண் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
ஆவடி மாநகராட்சியில் பணியாற்றிய முன்னாள் பெண் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போதைய ஆவடி மாநகராட்சி, நகராட்சியாக இருந்தபோது, நிலத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்து, அரசுக்கு ரூ.12 லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போது ஆவடி நகராட்சியில் 2 முறை திட்ட அதிகாரியாக இருந்த சுப்புத்தாய், ஓய்வுபெற்ற நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் சிக்கியுள்ள அதிகாரி சுப்புத்தாய், தற்போது மதுரை மாநகராட்சியில் உதவி செயற் பொறியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.