பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் தலைவி சீ.காவேரி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துக்குமார், ஆணையாளர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார்சாலை பணிகள், ரூ.1 கோடி 32 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரணி ஊராட்சியில் அமைந்துள்ள யூனியனுக்கு சொந்தமான சந்தையில் காலியாக உள்ள இடத்தில் திருமண மண்டபம், பல்லாரி, காய்கறிகளை பதப்படுத்தும் குளிர்சாதன கிட்டங்கி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.