மரத்தில் கார் மோதி 2 பேர் படுகாயம்

மரத்தில் கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-03-11 00:34 GMT
முக்கூடல்:
புளியங்குடி சிந்தாமணி நயினார் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40), செங்கோட்டை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா (78). இவர்கள் ஒரு காரில் நெல்லைக்கு வந்து விட்டு முக்கூடல் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை தென்காசி சேவியர் காலனியைச் சேர்ந்த சேகர் (39) என்பவர் ஓட்டினார்.
முக்கூடல் அருகே உள்ள அரிராம்நகர் விலக்கில் நேற்று அதிகாலை  வந்த போது, கார் திடீரென்று நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகேந்திரன், சுப்பையா படுகாயம் அடைந்தனர். சேகர் லேசான காயம் அடைந்தார். காரின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த மகேந்திரன், சுப்பையா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்