கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது; என்ஜினீயர் பலி
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார், பலமுறை ‘பல்டி’ அடித்து சதுப்பு நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் என்ஜினீயர் பலியானார்.
ஆலந்தூர்,
திருச்சியை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 24). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலை தேடி வந்தார். இவருடைய நண்பர் சிவகுமார் என்பவர் உடன் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை சிவகுமார், வெளிநாடு புறப்பட்டு சென்றார். இதற்காக முகுந்தன், தனது நண்பர் சிவகுமாரை காரில் சென்னை விமான நிலையம் அழைத்து வந்தார். நண்பரை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு முகுந்தன் மட்டும் காரில் வீடு திரும்பினார்.
கார் கவிழ்ந்து பலி
பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சென்றபோது, திடீரென முகுந்தனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி பல தடவை ‘பல்டி’ அடித்து சதுப்பு நிலத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அப்பளம்போல் நொறுங்கி, உருக்குலைந்த காரின் முன்பகுதி பாகங்கள் துண்டானது. காரின் பல பாகங்கள் தனித்தனியாக உடைந்து ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதில் பலத்த காயம் அடைந்த என்ஜினீயர் முகுந்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், பலியான முகுந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகுந்தன் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது வேறு ஏதாவது வாகனம் இடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.