விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-03-11 00:19 GMT
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி, சம்பன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகின்றனர். கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கையை குறைப்பதாகவும், இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்ற இடங்களில் காலதாமதமின்றி அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக வைக்கக்கோரியும் ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்துராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சேகர், மாடசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராஜ், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சாலையில் நெல்லை கொட்ட முயன்றதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்