கிளிகளை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அபராதம்
கிளிகளை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அபராதம் விதித்தனர்;
கடையம்:
அம்பையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அம்பை ஆற்றுச்சாலை மரங்களில் புறாக்கள் மற்றும் பச்சைக் கிளிகள் தங்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக, பொட்டல் புதூரைச் சேர்ந்த முகமது மீரா சாஹிப் மகன் முகமது வாசிம் அக்ரம் (வயது 30), சையத் மசூத் மகன் ஷேக் அப்துல் காதர் (29) ஆகிய 2 ேபரும் மரங்களில் ஏறியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.