ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர் மர்ம சாவு

ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்;

Update: 2022-03-10 22:00 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 65). இவர் கால்நடை துறையில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சிவனடியார் ஆகவும் இருந்து கோவில்களில் வழிபாடு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் சில பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தது.
இதுபற்றி தகவல் இந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்