சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

Update: 2022-03-10 21:42 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நயினார் (வயது 62). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நயினார் சம்பவத்தன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நயினாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்