புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயரிங் மாணவர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் கோழிப்பண்ணை தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். விவசாயி. இவருடைய மகன் ரங்கநாதன் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.
சாவு
சம்பவத்தன்று ரங்கநாதன் மனமுடைந்து தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதை கண்டதும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.