ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
கன்றுகுட்டிகள்
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 100 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கன்றுகுட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல், திண்டுக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
600 மாடுகள்
350 பசு மாடுகளும், 250 எருமை மாடுகளும் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.27 ஆயிரம் முதல் ரூ.44 ஆயிரம் வரையும், பசுமாடு ஒன்று ரூ.34 ஆயிரம் முதல் ரூ.67 ஆயிரம் வரையும் விற்பனையானது.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம், கோவா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் 100 மாடுகள் குறைவாக வந்திருந்ததாகவும், 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆனதாகவும் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.