கருத்தரங்கம்

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-03-10 21:05 GMT
குன்னம்:
குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அன்பழகன், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகப்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரவன், குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி எடுத்துக் கூறினர். மேலும் வட்ட வழங்கல் அலுவலர் பேசுகையில், பொருட்களை கடையில் வாங்கும்போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை நுகர்வோர் பார்த்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முடிவில் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்