அண்ணியை கொலை செய்த கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2022-03-10 20:47 GMT
கிருஷ்ணகிரி:-
சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வெட்டிக்கொலை 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூர் கதிரிபுரம், பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 47), விவசாயி. இவருக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். அதில், மாதையனின் அண்ணன் ராஜா என்பவர் இறந்துவிட்டார். அவரது சொத்துகளை அண்ணி மாது (45) பராமரித்து வந்த நிலையில், மாதுவுக்கும், மாதையனுக்கும் சொத்து பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் 27.5.2017 அன்று மாதையன் தனது அண்ணி மாதுவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதையனை கைது செய்தனர். 
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.
ஆயுள் தண்டனை 
தீர்ப்பில், அண்ணியை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாதையனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்