திருவாரூர் தியாகராஜர்கோவிலில் இந்திர விமான உற்சவம்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இந்திர விமான உற்சவம் நடந்தது.;

Update:2022-03-11 02:16 IST
திருவாரூர் தியாகராஜர்கோவிலில் இந்திர விமான உற்சவம்
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாள்தோறும் உற்சவம், சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்ட விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி தியாகராஜர் இந்திர விமான உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி தியாகராஜர் சாமியின் பிரதிநிதியான சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இந்திர விமான வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்