எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-1 மாணவி

மேலூர் அருகே எலி மருந்து தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-10 20:44 GMT
மேலூர்,

மேலூர் அருகே எலி மருந்து தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

எலி மருந்து தின்றார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. இவரை இடையவலசை கிராமத்தை சேர்ந்த தனியார் வேன் டிரைவர் மந்தைராஜன் (25) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து மாணவியிடம் மந்தைராஜன் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி நேற்று எலிமருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்சோவில் வாலிபர் கைது

 இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி விசாரணை நடத்தினார். பின்னர் மந்தைராஜனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்